Saturday 24 November 2012

விஸ்வரூபத்துக்கு புதுப் பிரச்னை?


'துப்பாக்கி' படத்திற்கு இஸ்லாம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர் அவர்களுடன் பேசி,  படத்திலிருந்து 5 காட்சிகளை  நீக்கினார்கள். தற்போது 'விஸ்வரூபம்' படத்திற்கும் அவ்வாறு பிரச்னை எழலாம் என்று கருத்து நிலவுகிறது.

AURO 3D தொழில்நுட்பம், பிரம்மாண்ட தயாரிப்பு என பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் 'விஸ்வரூபடம்' படத்தின் LOGO-வே உருது மொழி வடிவத்தில் அமைந்து இருக்கிறது. 

சர்ச்சைகள் ஒன்றும் கமலுக்கு புதிதல்ல. 'மன்மதன் அம்பு' படத்தில் கமல் எழுதிய ஒரு பாடல் சர்ச்சை ஆனது. அதனைத் தொடர்ந்து அப்பாடலை படத்தில் இருந்து நீக்கினார்கள்.


"இஸ்லாமிய மத பிரதிநிதிகளுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் 'விஸ்வரூபம்' படத்தை போட்டுக் காட்ட வேண்டும்! அதில் ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பது தெரிய வந்தால், அதை நீக்கிய பிறகே படத்தை வெளியிட வேண்டும்!'' என தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கமலுக்கு நெஞ்சு வலி என்றும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்றும் வதந்திகள் பரவின. இவ்வதந்தியை கமல் அலுவலகத்தினர் மறுத்து இருக்கிறார்கள்.

கமல் மிகுந்த ஆரோக்கியத்துடன் தற்போது அமெரிக்காவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'விஸ்வரூபம்' படத்தின் பிரிமியர் காட்சியினை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளிலும்,  தனது அடுத்த ஹாலிவுட் படத்திற்கான பணிகளிலும் கமல் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment